மணல் மாதா


மண்ணும் வணங்கும், விண்ணும் வணங்கும், அன்னை நீயே!
நிலையில்லா உலகில், உன் அன்பு மட்டும் நிரந்தரம் தாயே!
கலங்கும் மக்களின், கண்ணீர் துடைத்(தா)யே!!


அம்மா....! உன் ஆலய மண்ணை போல் நிம்மதி இல்லை, உலகில் எங்கும்!
தென்றல் நீந்தும் தேரி மணலிலே, தேடும் இடமெல்லாம் சந்தோசம் தொங்கும்!!
மருந்தே வேண்டாம் அன்னை பாதம் பட்ட மண்ணை தொட்டாலே நோய்கள் நீங்கும்!


துரோகங்கள் தந்த வழியெல்லாம் உந்தன் மணல் மீது தூசியாய் பறந்தோடும் அம்மா!
உன்னை பாடி கொண்டே இருந்தால், நான் வடித்த கண்ணீரின் காயங்கள் ஆறும் தேவ தாயே!!


மண்ணில் நீயின்றி ஏதுமில்லை, என்பதை சொல்ல எங்கள் மண்ணில் குடி கொண்ட தாயே!
எண்கள் மண்ணை ஆளும் மனங்களில் வாழும் மணல் மாதாவே நீ வாழ்க!!

மண்ணில் வரைந்த ஓவியமே!!

மண்ணில் வரைந்த ஓவியமே!
விண்ணில் வாழும் காவியமே !!
என்னில் கலந்த தாய் மனமே!
உன்னை பாடியே என் உயிர் வாழுமே!!

விண்ணை ஆளும் தாயே!!


விண்ணை ஆளும் தாயே !
எங்கள் மண்ணில் ஆளும் மரியே !!
இனி எங்கள் கோடை காலமும் வசந்த காலமே !
உன் கோவில் வந்தால் எங்கள் கவலைகள் மாயமே
!!


மண்ணில் வரைந்த ஓவியமே!
விண்ணில் வாழும் காவியமே !!
என்னில் கலந்த தாய் மனமே!
உன்னை பாடியே என் உயிர் வாழுமே!!

Manal matha Festival Kodiyetram- May 08 2009

Manal matha Festival Kodiyetram On May 08




From the Year 2009 onwards Manalmatha church festival will be celebrated in May second week.


Festival Starts on May second Friday.
Holy Mass will be conducted on every day
Festival ends on May 17th.
asp hit counter